இன்றைய செய்தி

Post Top Ad

13 September 2021

தபால்மா அதிபர் வெளியிட்டுள்ள அறிக்கை, சேவை மட்டுப்படுத்தப்படுகிறது...!!

 


தபால் சேவைகளை  மட்டுப்படுத்த தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.


நாட்டில் தற்போது உள்ள நெருக்கடி நிலைமையின் மத்தியில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தபால்மா அதிபர் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார்.


தாபால் சேவையினை அத்தியாவசிய சேவைகளில் ஒன்றாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளதுடன், வாரத்தில் ஆறு நாட்கள் பணிக்காக அலுவலகங்கள் திறப்பதற்காக கடந்த தினம் தீர்மானிக்கப்பட்டது.


தற்பபோது நாட்டில் உள்ள  போக்குவரத்து சிரமங்களுடன், கடுமையான தடைகளை எதிர்கொள்ள வேண்டியதாகியுள்ளது.


இதனடிப்படையில் தொழிற்சங்கங்கள் மற்றும் உயரிய அதிகாரிகளின் உடன்பாட்டுடன், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் இரண்டு நாட்களுக்கு அலுவலகங்களை முடுவதற்கும் மேலும் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே தபால் சேவைகளை முன்னொடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்ட  காலத்தில்,   தபால் ஊழியர்கள் சுமார் 500பேர் வரை கொரோனவினால் பாதிக்கப்பட்டிருந்ததுடன்.


இதன் காரணமாக சுமார் 50 அலுவலகங்கள் வரை முடியுள்ள நிலையில் உள்ளன.


தபாலகத்தினூடாக வழங்கப்படும் முதியோர் கொடுப்பனவுகள் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் வழங்கப்படும்.

No comments:

Post a Comment

Post Top Ad