இன்றைய செய்தி

Post Top Ad

19 August 2021

நாட்டில் எந்த நேரத்திலும் ஊரட‌ங்கு உ‌த்தரவு பிறப்பிக்கபடலாம்

 



நாட்டில் பொது முடக்கம் எந்த நேரத்திலும் நடைமுறைக்கு வர வாய்ப்பிருப்பதாக ஆகவே மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைக்கான பொருட்களை சேமித்து வைத்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

 எதிர்வரும் வௌ்ளிக்கிழமை தொடக்கம் நாட்டை முடக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், இரண்டு கிழமைகளுக்கு நாட்டில் வேலைநிறுத்தங்களை மேற்கொண்டு நாட்டை முடக்குவோம் என ஒன்றிணைந்த தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் தேவையான ​பொருள்களை சேமித்து வைத்துக் கொள்ளவும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது 

இது தொட‌ர்பாக அரச மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் கூட்டு கூட்டணியில் அங்கம் வகிக்கும் தொழிற்சங்கங்களே இவ் அறிவிப்பை விடுத்துள்ளன. இதனடிப்படையில், எதிர்வரும் 23ஆம் திகதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ள உள்ளதாக அரச மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் கூட்டு கூட்டணி அறிவித்துள்ளது.

நாட்டை தொடர்ந்து 10 நாள்களுக்கு மூடும் வகையிலே இந்த தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்வதாக, அந்த கூட்டணியின் ஒழுங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.


வௌ்ளிக்கிழமை முதல் நாட்டை முடங்குவதற்கு அரசாங்கம் தீர்மானங்களை எடுக்கவில்லை என்றால் , 23ஆம் திகதி முதல் 10 நாட்கள் தொடர்ச்சியாக முடக்கப்படும் பட்சத்தில் மக்கள் தேவையான ​பொருள்களை கொள்வனவு செய்துகொண்டு வீடுகளிலிலேயே இருக்கவும் என்றும் மக்களிடத்தில் அவர் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad