இன்றைய செய்தி

Post Top Ad

19 August 2021

இலங்கை மக்களுக்கு இராணுவத் தளபதியின் முக்கிய அறிவிப்பு!!!

 


நாட்டில் இன்று தொடக்கம் அமுலாகும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்தல் விடுத்துள்ளார் .  

இதன்படி புதிய சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக இன்று தொடக்கம் வீடு ஒன்றில் இருந்து ஒருவர் மாத்திரமே வெளியே செல்ல அனுமதிக்க படுவார் என்றும்  தொழில் நிமித்தம் காரணமாக வெளியில் செல்பவர்கள் வழமைப் போல செல்ல முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் நேற்று 18ம் திகதி வெளியிடப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்களையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளர்.

இதன்படி, வணிக வளாகங்களுக்கு அதன் மொத்த வாடிக்கையாளர்களில் 25 சதவீதத்தினருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும் இதேபோன்று பல்பொருள் அங்காடியினுள் ஒரே நேரத்தில் அதன் மொத்த திறனில் 25 சதவீதமானவர்களுக்கே அனுமதி வழங்கப்படும், பகல்நேர பராமரிப்பு நிலையங்கள் இரண்டு வாரங்களுக்கு மூடப்படும்,

உடல் கட்டமைப்பு மையங்கள், உட்புற விளையாட்டரங்குகள் இன்று தொடக்கம் மூடப்படும், சிறுவர் பூங்காக்கள், திருவிழாக்கள், இசை நிகழ்ச்சிகள், விருந்துகள் மற்றும் கடற்கரைகளில் ஒன்று கூடுதல் இன்று தொடக்கம் தடைசெய்யப்படும் என்பதுடன் நீச்சல் குளங்கள் மற்றும் ஸ்பாக்கள் இன்று முதல் முழுமையாக மூடப்படுகின்றது என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad