இன்றைய செய்தி

Post Top Ad

16 August 2021

குழந்தைகளை வீட்டுக்குள் வைத்துக்கொள்ளுங்கள், வெளியாட்களை வீட்டிற்குள் நுழைய விடாதீர்கள்


டெல்டா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருவதால் குழந்தைகள் வீட்டில் இருக்கும் போது கூட முகக்கவசம் அணிவதற்கு பரிந்துரைக்க வேண்டும் என லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் சிறப்பு வைத்தியர் டாக்டர் தீபால் பெரேரா கூறியுள்ளார்


மேலும் அவர் கூறுகையில் வீட்டில் உள்ள ஒருவர் கழிவறை அல்லது குளியலறையை பயன்படுத்திய 15 நிமிடங்களுக்குப் பின்னரே அதை அடுத்தவர் பயன்படுத்த வேண்டும். இதனால் வைரஸ் பரவலில் இருந்து தப்பிக்கலாம் ஏனெனில் வைரஸ் தொற்றுவதற்கு 15 நிமிடங்கள் வரை ஆகும்


ஆகவே ஆபத்தான இடங்களில் நிற்கும் போது 15 நிமிடங்கள் அல்லது அதற்கும் மேல் முகக்கவசங்களை அகற்றுவதனால் வைரஸ் தொற்று இலகுவாக ஏற்பட வாய்ப்பு உள்ளது 


மேலும், இந்தியாவிலும் அமெரிக்காவிலும், டெல்டா வகை வைரஸ் பரவல் குழந்தைகளிடையே அதிகமாக உள்ளதால் உங்கள் குழந்தைகளை வீட்டில் வைத்துக்கொள்வதோடு வெளியாட்களை வீட்டிற்குள் நுழைய விடாது பார்த்துக்கொள்ளவும் என்று வைத்திய நிபுணர் வலியுறுத்துகிறார்.







No comments:

Post a Comment

Post Top Ad