இன்றைய செய்தி

Post Top Ad

16 August 2021

ரயில், பஸ்களில் எவ்வாறு பயணிக்க முடியும்?

  





 மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவையானது அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்கும் நோக்கில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெற்று வருவதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிக்கின்றார்.


இதன் மூலம் , ரயில் மற்றும் பஸ் சேவைகள் இவ்வாறு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.


தற்போதைய நிலையில் தொழில் நிமித்தம் காரணமாக செல்லும் அரச ஊழியர்கள் மாத்திரம் தமது ஆள்அடையாளத்தை அடையாளத்தை உறுதி படுத்தியதன் பின்னர் அனுமதி வழங்கப்பட்டு ரயில்வே சேவை முன்னெடுக்கப்படும் என ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.


இச் சேவைசுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளின் பிரகாரம், 

 முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


அத்தியாவசிய சேவைகளுக்கு ஏற்ப, மாகாணங்களுக்கு இடையிலும், மாகாணங்களுக்குள்ளும் ரயில் சேவைகள் காலை மற்றும் மாலை வேளைகளில் மாத்திரம் முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறுகின்றார்.




அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்காக , 40 வீதமான பஸ்களை சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸிலி ரணவக்க தெரிவித்துள்ள அவர் இலங்கை போக்குவரத்து சபையில் பணிபுரியும் சுமார் 300 பேர், கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உள்ளதாக அவர் கூறுகின்றார்.


 இதன் காரணமாக ஊழியர்களை ஒவ்வொரு பகுதியினராக அழைத்து , சேவைகளில் ஈடுபடுத்தி வருவதாகவும் கிங்ஸிலி ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment

Post Top Ad