இன்றைய செய்தி

Post Top Ad

20 August 2021

ஊரடங்கு காலத்தில் வேலைக்குச் செல்வோர் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

 


ஊரடங்கு காலத்தில் வேலைக்குச் செல்லும் ஊழியர்கள் அது தொடர்பாக விஷேட அனுமதி பெறத் தேவையில்லை என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

நாடு தழுவிய ரீதியில் இன்றிரவு 10.00 மணி முதல் 30ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும் எனவும் அவர் கூறியதுடன்.

இக்காலகட்டத்தில் அத்தியாவசிய சேவைகள், ஆடைத் தொழில்கள், விவசாய நடவடிக்கைகள் மற்றும் மருந்தகங்களின் செயற்பாடுகள் வழமைப் போல இடம்பெறும் என்றும் அவர்குறிப்பிட்டார்.

அந்தவகையில் தொழில் நிமித்தம் காரணமாக செல்பவர்கள் விஷேட அனுமதி எதுவும் பெறத் தேவையில்லை என்றும் வீதித்தடைகளில் உள்ள பொலிஸார் மற்றும் இராணுவத்தினரிடம் உங்களது அடையாள அட்டையைக் காட்டி அனுமதி பெற முடியும் என்றும் அவர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad