இன்றைய செய்தி

Post Top Ad

20 September 2021

வடக்கு மாகாணத்தில் தடுப்பூசி வழங்குவது தொடர்பாக..!

 



   வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் 20 தொடக்கம் 30 வயதிற்கு உட்பட்ட அனைவருக்கும், நாளைய தினம் முதல் தடுப்பூசி வழங்கப்பட உள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரும் மருத்துவருமான ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பான  அறிக்கையொன்றை வெளியிட்டு, அந்த அறிக்கையிலே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 


மேலும் தடுப்பூசி வழங்கப்படும் இடங்கள் பற்றிய விபரங்கள் அப்பிரதேசத்தின் சுகாதார மருத்துவ அதிகாரியினால் தெரிவிக்கப்படும்.


இதன்படி அறிவிக்கப்பட்ட தடுப்பூசி வழங்கும் நிலையங்களில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான முதலாவது, இரண்டாவது தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.


20 தொடக்கம் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் அனைவரும் தமது ஆள்அடையாளத்தை அ  உறுதிப்படுத்தக்கூடிய ஆவணங்களை சமர்ப்பிப்தன் மூலம் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளலாம்.


யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ளோருக்கு தடுப்பூசி அல்லது வேறு மருந்துகளிற்கு ஒவ்வாமை தன்னமை உடையவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவனையிலும், தெல்லிப்பளை, பருத்தித்துறை, சாவகச்சேரி மற்றும் ஊர்காவற்றுறை ஆதார மருத்துவமனைகளிலும் செப்ரெம்பர் மாதம் 25ஆம் திகதி மற்றும் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி சனிக்கிழமைகளில் காலை 8.00 மணி தொடக்கம் செலுத்துவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.


அவ்வாறான ஒவ்வாமை தன்மை உடையவர்களாக சந்தேகிக்கப்பட்டால் அவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட மாட்டாது திருப்பி அனுப்பப்பட்டவர்கள் தமது பிரதேசத்தின் சுகாதார வைத்திய அதிகாரியின் பரிந்துரைக் கடிதத்தைப் பெற்று மேலகுறிப்பிடப்பட்ட வைத்திய சாலைகளில் ஏதாவது ஒன்றில் தமக்கான தடுப்பூசியை பாதுகாப்பாக முறையில் பெற்றுக்கொள்ள முடியும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

Post Top Ad