இன்றைய செய்தி

Post Top Ad

20 August 2021

சற்று முன் வெளியான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு! நாடளாவிய ரீதியிலான முடக்கம் இன்று இரவு முதல் அமுல்!

 



இன்று இரவு பத்து மணி தொடக்கம் நாடு தழுவிய ரீதியிலான முடக்கம் இலங்கையில் அமுல்படுத்தப்படுவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல அறிவிப்பொன்றை விடுத்துள்ளார் . 

அத்தோடு , இம் முடக்கமானது எதிர்வருகின்ற 30ஆம் திகதி வரையில் அமுலில் இருக்கூடும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது தொடர்பாக சற்று முன் சுகாதார அமைச்சர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளதுடன், நாட்டிலுள்ள மக்கள் அனைவரையும் சட்டத்தை கடைப்பிடிக்குமாறும், வீட்டிலேயே தங்கியிருக்குமாறும் இருக்குமாறும் வலியுறுத்தியுள்ளார். 

மேலும் மகாசங்கத்தினரின் கோரிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டுள்ளதாக ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாடு முடக்கப்படுவது தொடர்பாக உத்தியோகபூர்வமாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். 
இதேவேளை, அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த நாட்டில் ஏனைய சகல விடயங்களும் முடக்கப்படும் என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

குறித்த முடக்கமானது எப்போது வரையில் அமுலில் இருக்கும் என்பது தொடர்பாக இன்று இரவு தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார் . நாட்டில் நிலவும் கோவிட்-19 தொற்று நிலைமை தொடர்பான கூட்டம் ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

குறித்த கூட்டம் முடிந்ததன் பின் அங்கிருந்து வெளியேறும் போது ஊடவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன மற்றும் அமைச்சர் காமினி லொக்குகே ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad