இன்றைய செய்தி

Post Top Ad

19 August 2021

PCR, அன்டிஜென் பரிசோதனைகளை தொடர்ந்து சடலங்களை தகனம் செய்வதற்கும் கட்டணம்

 



கொவிட்-19 தொற்றால் இறந்தவர்களின் உடல்களை இலவசமாக தகனம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ள போதிலும், கட்டணம் அறவிட தெஹிஅத்தகண்டிய பிரதேச சபை தீர்மானித்துள்ளது.   தெஹிஅத்தகண்டிய பிரதேச சபையின் மாதாந்த கூட்டத்திலே இம் முடிவானது ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொவிட் தொற்று காரணமாக வருமானம் குறைந்த பிரதேச சபையாக உள்ளபடியினால் இவ்வாறு பணம் அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதேச சபையின் தலைவர் சுதத் தேஷபிரியகே தலைமையில் இடம்பெற்ற மாதாந்த கூட்டத்தில் இந்த யோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் தெஹிஅத்தகண்டிய பிரதேச சபையில் இடம்பெற்ற 14 கொவிட் மரணங்களில் 9 சடலங்களை தகனம் செய்வதற்கு எவ்வித பணமும் அறவிடப்படவில்லை என பிரதேச சபையின் தலைவர் தெரிவித்துள்ளதோடு 1800க்கும் அதிகமான கொவிட் தொற்றாளர்கள் பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களில் அதிகமானோர் ஆபத்தான நிலைமையில் உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். 

No comments:

Post a Comment

Post Top Ad