இன்றைய செய்தி

Post Top Ad

05 September 2021

சினோபாம் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கான முக்கிய அறிவிப்பு...!

 



கொரோனா வைரஸிற்கு எதிரான சினோபார்ம் தடுப்பூசியின் நோயெதிர்ப்பு சக்தி தொடர்பில் விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் தகவல் ஒன்று வெளியிட்டுள்ளது. 

அதில்சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்ட 60 வயதுக்குட்பட்டவர்கள் சிறந்த நோயெதிர்ப்பு சக்தி கிடைக்கும் என்பதோடு, 60 வயதுக்கு மேற்பட்ட சிலர் குறைந்த அளவிலே நோயெதிர்ப்பு சக்தியை கொண்டிருப்பதாக விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனால் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் பட்சத்தில் அவர்கள் உயிரிழப்பதற்கான சந்தர்ப்பம் அதிகம் காணப்படுவதாக குறித்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. 
பல்தரப்பட்ட ஆய்வுகள் மூலமே இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலை சினோபாம் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டவர்களுக்கு மாத்திரமே அதிகம் காணப்படுவதாகவும் Pfizer, Moderna மற்றும் AstraZeneca ஆகிய தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டவர்களிடையே இந் நிலைகுறைவாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, புற்றுநோய் உள்ளிட்ட ஏனைய நோய் காரணிகளுக்காக சிகிச்சை பெறுபவர்கள் Sinopharm கொரோனா தடுப்பூசியினை முழுமையாக பெற்றுக்கொண்டுள்ள போதும் உரிய நோயெதிர்ப்பு சக்தியை கொண்டிருக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.

இந்த காரணத்தினால், குறிப்பிட்ட. நபர்களுக்கு Pfizer, AstraZeneca மற்றும் Moderna ஆகிய கொரோனா தடுப்பூசிகள் மூன்றாவதாக வழங்குவதற்கு விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment

Post Top Ad