இன்றைய செய்தி

Post Top Ad

03 September 2021

தென்னாபிரிக்க வைரஸ் தாக்கினால் மரணங்கள் மூன்று மடங்கு அதிகரிக்கும்..!!

 



நா‌ட்டி‌ல் தற்போது பரவி வரும் டெல்டா வைரஸின் தாக்கத்தினால் கடந்த மாத்தில் மரணங்களின் 50% த்தினால் அதிகரித்துள்ளது இந்நிலையில் தென்னாபிரிக்காவில் கண்டு பிடிக்கப்பட்ட வைரஸ் இலங்கையில் பரவுமாயின் அந்த வைரஸினால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக இருக்கும் என்றும் சுகாதார வைத்திய நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

தற்போது இலங்கை அபாய கட்டத்தில் உள்ளது டெல்டா வைரஸ் பரவல் தொடர்பான நிலமையை தெளிவு படுத்துவதோடு புதிய வைரஸ் பரவல் தொடர்பான எச்சரிக்கையும் விடுத்து வருகின்றனர்.  எனவே நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் நிலமை தொடர்பிலும் வரும் காலங்களில் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் குறித்தும் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ அறிவியல் பீடத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ பிரிவின் பணிப்பாளரும் வைத்திய நிபுணருமான சந்திம ஜீவந்தர கூறுகையில்.
'' இலங்கையில் பார்வைக்கொண்டு வரும் டெல்டா வகை வைரஸ் குறித்து நாம் பலதரப்பட்ட எச்சரிக்கை விடுத்தே வருகிறோம் இருப்பினும் இலங்கை நாடு டெல்டா வைரஸினால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நாடுகளின் பட்டியலிலே உள்ளது, நாளாந்த கொவிட் தொற்றாளர்கள் கொவிட் மரணங்கள் பதிவாகும் நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தில் உள்ளது, அதே போல் கடந்த மாதத்தில் கொவிட் தொற்று 50%னிலால் அதிகரித்துள்ளது.

மேலும் தென்னாபிரிக்காவில் பரவும் சி. 1.2 என்னும் வைரஸ் உலகில் 6 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது எமக்கும் இது தொட‌ர்பாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது இந்தவகை வைரஸ் தற்போது நியூஸிலாந்தில் வேகமாக பரவி வருகிறது ஆசியாவின் ஏனைய நாடுகளுக்கும் இது பரவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தென்னாபிரிக்கவில் '' மூ'' என்னும் வைரஸும் பரவி வருவதாகவும் இவ்விரண்டு வைரஸ்களும் எந்தவிதமான தடுப்பூசிகளுக்கும் கட்டுப்படாதவைகளாகும் என்று குறிப்பிட்டதுடன் இவ்விரண்டு வைரஸ்களில் எதேனும் ஒன்று இலங்கையில் பரவுமாயின் மரண வீதமானது மூன்று மடங்காக அதிகரிக்கக் கூடும் என்றார்.

No comments:

Post a Comment

Post Top Ad