இன்றைய செய்தி

Post Top Ad

03 September 2021

இரண்டு தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டோருக்கும் கொரோனா தொற்று ஏற்படக்கூடும்

 


இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகக்கூடும் என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் முன்னதாக கொவிட்-19 தொற்று உறுதியானவர்களுக்கும் மீள கொவிட்-19 தொற்று உறுதியாகக் கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்று உறுதியானவர்கள் குறிப்பிட்ட காலத்தின் பின்னர் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது நாட்டில் 224 மத்திய நிலையங்களில் 38,825 நோயாளர்களுக்கான படுக்கைகள் உள்ளன, அவற்றில் 31,788 படுக்கைகள் பயன்படுத்தப்படுகின்றன.

இதுதவிர தீவிர சிகிச்சை பிரிவில் 100 படுக்கைகள் உபயோகிக்கப்பட்டு வருவதாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய அதிகாரி ஹேமந்த ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad