இன்றைய செய்தி

Post Top Ad

14 September 2021

மேலும் 136 மரணங்கள் பதிவு..!

 


இலங்கையில் கொரோனா தொற்று தொடர்பான மேலும் 136 மரணங்கள் நேற்றைய தினம் 13 ஆம் திகதி பதிவாகியுள்ளதென, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி இலங்கையில் ஏற்கனவே 11,431 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,  நேற்றைய தினம் 136 மரணங்களுடன் பதிவானதை தொடர்ந்து இலங்கையில் பதிவான மொத்த கொவிட் மரணங்கள் 11,567 ஆகும்.

இவ்வாறு மரணமடைந்தவர்களில்  76 ஆண்களும், 60 பெண்கள் என்பதுடன், 60 வயதுக்கு மேற்பட்டோர் 106 பேர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad