இன்றைய செய்தி

Post Top Ad

14 September 2021

மன்னாரில் உள்ள சோதனைச்சாவடிகளில் 15 ஆம் திகதி தொடக்கம் தடுப்பூசி அட்டை பரிசோதனை...!!

 



மன்னாரில் உள்ள சோதனைச் சாவடிகள் மூலம் நாளை (15) தொடக்கம் கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொண்ட அட்டையை பரிசோதிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளது.


அதேவேளை தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவிடத்து பி.சி.ஆர். அல்லது அன்ரிஜன் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி. வினோதன் கூறியுள்ளார். 


இது தொட‌ர்பாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நேற்றைய தினம் 13 ஆம் திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே அவர் இவ்வாறு கூறினார்.


அவர் மேலும் கூறுகையில் மன்னார் மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வேலை நிறைவிற்கு வருகின்றது. 


இதன் அடிப்படையில் இது வரையில் 71,396 பேர் முதல் தடுப்பூசியும் , 56,363 பேர் இரண்டாவது தடுப்பூசியும்  பெற்றுள்ளனர்.


20 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப் பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் சில இடங்களில் ஆரம்பிக்கப்பட்டு அதுவும் விரைவில் முடிவிற்கு கொண்டுவரப்பட உள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad