இன்றைய செய்தி

Post Top Ad

12 September 2021

பாடசாலை மீள ஆரம்பிப்பது தொடர்பாக வெளியான தகவல்..!!

 நவம்பர் க்கு முன் பாடசாலைகள் திறப்பு ஜனாதிபதி பணிப்பு..!



நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளை திறப்பதற்கு வழிகாட்டல் அறிக்கையொன்றை தயாரித்து அதனை கையளிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுகாதார அமைச்சரிடம் ஆலோசனை வழங்கியுள்ளார்.


விஷேட வைத்திய நிபுணர்கள், தொழில்நுட்ப மதிப்பீட்டு நடவடிக்கைகளுடன் தொடர்புடைய கல்வியமைச்சை சார்ந்த சகலரது ஒத்துழைப்புடனும் பாடசாலைகளை மீள திறப்பதற்க்கான அறிக்கை ஒன்றினை தயாரித்து சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன அவர்களினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வழங்கப்பட்டது.


இதன் படி நவம்பர் மதத்திற்குள் சகல பாடசாலைகளையும் திறப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது, இது தொடர்பாக கடந்த 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜனாதிபதி கொரோனா கட்டுப்பாட்டு செயலணி கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.


கிராம பாடசாலை தொடக்கம் முதல் நிலை பாடசாலை வரை திறக்க முடியும் என்று அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் டலஸ் அழகப்பெரும உள்ளிட்டோர் குறிப்பிட்டுள்ளார், இதற்க்கு மாகாண ஆளுநர்களும் சம்மதம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதன் காரணமாக 12 தொடக்கம் 18 இடைப்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தை துரிதப்படுத்தவும் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார். 


No comments:

Post a Comment

Post Top Ad