இன்றைய செய்தி

Post Top Ad

16 September 2021

சீன தடுப்பூசிகளை விரும்பாத தென்கொரிய அதிகாரிகள்..!

 


சீனத் தலைநகரமான பீஜிங்கில் உள்ள தென்கொரிய தூதரகத்தில் பணியாற்றும் பெரும்பா லானோர் சினோபார்ம் அல்லது சினோவெக் கொவிட் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்வதைத்
தவிர்த்து வருவதாக கொரியா டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பீஜிங் தென்கொரிய தூதரகத்தில் பணியாற்றும் 79 இராஜதந்திரிகளில்
இதுவரை 35 பேரே தடுப்பூசி ஏற்றிக்கொண்டுள்ளனர் எனவும் ஏனையோர் தென்கொரியாவுக்கு
அலுவல் ரீதியாக செல்ல வாய்ப்பு கிடைக்கும் போது வேறு தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளலாம் என்பதால் சீன தயாரிப்புகளைத் தவிர்க்கின்றனர் என்றும் கொரியா டைம்ஸ் பத்திரிகையின்
சகோதரப் பத்திரிகையான ஹேன்கூக் ல்போ தெரிவித்திருக்கிறது.
இதேசமயம் ஹொங்கொங்கில் உள்ள தென்கொரிய உப தூதுவரகத்தில் பணியாற்றும்
பத்து இராஜதந்திரிகளில் ஒன்பது பேர் பைஸர் தடுப்பூசியை ஏற்றிக்கொண்டுள்ளனர். இதே
சமயம் வடகொரியாவுக்கு வழங்கப்படவிருந்த ஒரு தொகை சீன தடுப்பூசி மருந்துகளை
அந்நாடு ஏற்க மறுத்திருப்பதோடு அவற்றை தடுப்பூசி தேவைப்படும் நாடுகளுக்கு அனுப்பிவைக்கும்படி கேட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad