இன்றைய செய்தி

Post Top Ad

21 August 2021

ஊரடங்கு சட்டத்தை மீறுகின்றவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிப்பு...!!!




 நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறுகின்றவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்பது தொடர்பாக பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை கூறியுள்ளார். 

நேற்று இரவு 20 ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை நாட்டில் ஊரடங்கு ச‌ட்ட‌ம் அமுல்படுத்தப்பட்டுள்ள இந் நிலையில், ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதுடன் சட்டங்களை கடுமையாக்கவும் வலியுறுத்தியுள்ளார் .


இதற்கிடையே தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையிலும் தொழில் நடவடிக்கைகளுக்காக வெளியில் செல்பவர்கள் விசேட அனுமதி பத்திரத்தை(pass) பெற்றுக் கொள்ளுதல் அத்தியாவசியமானதில்லை என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஆயினும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினரிடம் தங்களது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையிலான ஆவணங்களை வைத்திருத்தல் வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad