இன்றைய செய்தி

Post Top Ad

21 September 2021

அமெரிக்கா வர அனுமதி அமெரிக்கா அரசாங்கம் அறிவித்தது...!!

 



கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக் கொண்டவா்கள் மாத்திரம் நவம்பா் மாத தொடக்கம் அமெரிக்கா வருவதற்கு அனுமதிக்கப்படுவா் என்று அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டில் கொரோனா தொற்று பரவத் தொடங்கிய போது இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டைச் சோ்ந்தவா்கள் அமெரிக்கா வருவதற்கு அந்த நாட்டின் முன்னைய அதிபரான டொனால்ட் டிரம்ப் தடை விதித்திருந்தார்.

இந்நிலையில் அந்நாட்டு தலைநகரான வாஷிங்டனிலுள்ள வெள்ளை மாளிகையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கான ஒருங்கிணைப்பாளாரன ஜெஃப் ஸையன்ட்ஸ் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் தெரிவிக்கையில் ‘‘இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சோ்ந்தவா்கள் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்டிருந்தால்  அவா்கள் நவம்பா் மாத ஆரம்பத்திலிருந்து அமெரிக்கா வருவதற்கு அனுமதிக்கப்படுவா். 

அமெரிக்கா வருகை தர இருப்பவர்கள் பயணம் மேற்கொள்வதற்கு 3 நாள்களுக்கு முன்னதாக பரிசோதனை மேற்கொண்டு தங்களுக்கு கொரோனா பாதிப்பில்லை என்பதை உறுதிபடுத்திய சான்றிதழுடன் வரவேண்டும் என்பதுடன் அவா்கள் அமெரிக்கா வந்தபின் தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை என்று தெரிவித்தாா். 

No comments:

Post a Comment

Post Top Ad