இன்றைய செய்தி

Post Top Ad

20 September 2021

நேற்றைய போட்டியோடு பட்டியலில் முன்னிலைக்கு வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...!

 



மும்பை இந்தியன்ஸுக்கு அ‌ணி‌க்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.


14 வது ஐபிஎல் சீசனின் இரண்டாவது பகுதியின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் ஆடியது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது  சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 156 ஓட்டங்கள் எடுத்தது.


157  வெற்றி இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான குயின்டன் டி காக் மற்றும் அன்மோல்பிரீத் சிங் களமிறங்கினர்.


ஆரம்பத்தில் 3 பவுண்டரிகள் விளாசி அச்சுறுத்தலாக விளையாடிய டி காக் (17) விக்கெட்டை தீபக் சஹார் பெற்றுக் கொண்டார்.


இதன்பின் 2 பவுண்டரி, சிக்ஸர் அடித்த அன்மோல்பிரீத் 16 ஓட்டங்களுக்கு போல்டாக்கினார் சஹார். அத்துடன் இதனைத் தொடர்ந்து  ஷர்துல் தாக்குர் வீசிய பவர் பிளேவின் கடைசி ஓவரில் சூர்யகுமார் யாதவ் 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.


இந்நிலையில் 10 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 4 விக்கெட்டுகள் இழந்து 62 ஓட்டங்கள் எடுத்தது.


இதனையடுத்து சௌரப் திவாரியுடன் இணைந்த தலைவர் கைரன் பொல்லார்ட். ஜடேஜா வின் ஓவரில் சிக்ஸர் அடித்து சென்னையை மிரட்டினார் பொல்லார்ட். இந்த நிலையில் 14 வது ஓவரை வீசுவதற்கு ஜோஷ் ஹேசில்வுட்டை அழைத்தார் தலைவர் தோனி. அதன் பலனாக பொல்லார்ட் 15 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வந்த  கிருனால் பாண்டியா 4 ஓட்டங்களுக்கு ரன் அவுட் ஆகி வெளியேறினார்.


கடுமையான நெருக்கடியில் இருந்த மும்பை அணிக்கு ஆடம் மில்ன் ஒத்துழைப்பு தர வெற்றியை நோக்கி ஆடத் தொடங்கினார் திவாரி. சென்னை அணி பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் செயற்பட்டதினால் பெரும்பாலும் ஒரு ஓவருக்கு அதிகபட்சம் 10 ஓட்டங்களைத் தாண்டவில்லை. ஷர்துலின் 19-வது ஓவரில் மாத்திரம் அந்த மும்பை அணி 15 ஓட்டங்கள் எடுத்தது.


இந்நிலையில் கடைசி ஓவரில் மும்பை அணியின் வெற்றிக்கு இலக்கிற்கு 24 ஓட்டங்கள் தேவை என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டது.


கடைசி ஓவர் பிராவோவிடன் சென்றது. 2-வது பந்தில் மில்ன் 15 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். 4-வது பந்தில் ராகுல் சஹார் ஓட்டம் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினார். இறுதி பந்தில் ஒரு ஓட்டம் கிடைத்தது.


ஆக மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 136 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. இதன்மூலம், சென்னை அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


No comments:

Post a Comment

Post Top Ad