இன்றைய செய்தி

Post Top Ad

02 September 2021

ஐ. பி. எல் தொடரில் இரண்டு புதிய அணிகள் வருகை...!!

 



2022 ஆம் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளில் இரண்டு புதிய அணிகள் சேர்க்கப்பட உள்ளபடியால் பிசிசிஐ அமைப்புக்கு ஆயிரக்கணக்கான கோடியில் வருமானம் கிடைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் டீ 20 தொடர் 14 ஆவது ஆண்டாக நடைபெற்று வருகிறது தற்போது 8 அணிகளே உள்ள நிலையில் அதனை 10 ஆக உயர்த்தப்பட உள்ளது.

இதற்கு குஜராத்தை சேர்ந்த அதானி குழுமமும், மற்றுமொரு நிறுவனமும் ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது, இந்நிலையில் புதிய அணிக்கான விண்ணப்பத்திற்க்காக எந்த நிறுவனம் விண்ணப்பித்தாலும் 75 கோடி முன்பதிவு கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என பிசிசிஐ தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இது கு‌றி‌த்து பிசிசிஐ யின் மூத்த அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் டி 20 தொடரில் புதிதாக இரண்டு அணிகளை சேர்க்கவுள்ளோம் என்று குறிப்பிட்டார்.
இதற்க்காக 75 கோடிக்கு விருப்பமனு தாக்கல் செய்யப்பட்டு இரு அணிகளுக்கான அடிப்படை விலையாக 1,700 நிர்ணயிக்கப்பட்டு பின்னர் அது 2000 கோடியாக மாற்றம் செய்யப்பட்டது, இந்த இரு புதிய அ‌ணிக‌ள் வருகையால் பிசிசிஐ க்கு குறைந்தபட்சம் 5 ஆயிரம் கோடி வருவாய் கிடைப்பதுடன் அணிகளை வாங்கவும் பல நிறுவனங்கள் காத்திருக்கின்றது என அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Top Ad