இன்றைய செய்தி

Post Top Ad

18 September 2021

கடைசி நிமிடத்தில் போட்டி நிறுத்தம், நாடு திரும்பியது அணி..!

 



பாகிஸ்தானில் மூன்று ஒருநாள் 5 டி20 ஆட்டங்களை ஆடுவதற்கு பாகிஸ்தானுக்கு வருகை மேற்கொண்டது நியூசிலாந்து அணி. 

18 வருடங்களுக்குப் பின்பு பாகிஸ்தானுக்கு நியூசிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொள்வதால் இந்த தொடர் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகவே இருந்தது.


ஒருநாள் போட்டிகள் ராவல்பிண்டியிலும் டி20 தொடர் லாகூரிலும் நடைபெற இருந்தன. இதன் முதல் ஒருநாள் ஆட்டம் இன்றைய தினம் நடைபெற இருந்தது.


ஆனால், ஆட்டம் தொடங்கவதற்கு சில நிமிடங்கள் வரை இரு அணி வீரர்களும் மைதானத்துக்கு வரவில்லை என்பதுடன் ரசிகர்களும் மைதானத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் அசாதாரணமான சூழல் அங்கு நிலவியது.


இதன் காரணமாக பாகிஸ்தானில் நடைபெற இருந்த ஒருநாள், டி20 தொடர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது.


இதில் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணத்தினால் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்கிறோம். நியூசிலாந்து அணி வீரர்கள் உடன் நாடு திரும்புவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தனது குறித்த அறிக்கை வெளியிட்டது.


பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் அறிவிக்கப்பட்டதாவது: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் பாகிஸ்தானும் உச்சக்கட்ட பாதுகாப்பை இங்கு கிரிக்கெட் விளையாட வரும் அணிகளுக்கு வழங்கி வருகிறோம். இதனையே நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கும் நாம் பாதுகாப்பை உறுதி படுத்தியுள்ளோம். நியூசிலாந்து பிரதமரிடம் தனிப்பட்ட முறையில் பாகிஸ்தான் பிரதமர் பேசியுள்ளார். உலகளவில் சிறந்த புலனாய்வு அமைப்பு எம்மிடம் உண்டு. அதனால் பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல் எதுவும் இல்லை என அவர் கூறினார். மேலும் கடைசி நேர விலகலினால் பாகிஸ்தான் மற்றும் சர்வதேச அளவில் கிரிக்கெட் ரசிகர்கள் தற்போது ஏமாற்றமடைந்துள்ளார்கள் எனக் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad