இன்றைய செய்தி

Post Top Ad

20 September 2021

பெங்களூர் அணியின் கேப்டன் பதவியிலிருந்து வெளியேரும் விராட் கோலி..!

 



நடப்பு ஐபிஎல் சீசனுக்கு பின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து  கோலி விலகுவதாக பெங்களூர் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆயினும் அவர் அடுத்தடுத்த சீசன் போட்டிகளில் வீரராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது


விராட் கோலி இந்த தீர்மாத்திற்கு Prathmesh மிஸ்ரா கூறியிருப்பதாவது விராட் கோலி மிகச் சிறந்த வீரர். அவர் ஆர்சிபி அணியின் சொத்து. அவரது ஆட்டத்தின் நேர்த்தியும், கேப்டன்சியும் மிகவும் அற்புதமானது. அவரது முடிவிற்கு  நாங்கள் மதிப்பளிக்கிறோம் என்கிறார் அத்தோடு அவரது தலைமை பண்புக்கு ஆர்சிபி தலை வணங்குவதோடு. கோலி அடுத்த சீசன் போட்டிகளில் அணியின் சீனியர் வீரராக களமிறங்குவார் என பெங்களூர் அணியின் தலைவர்  குறிப்பிட்டார். 


இது தொட‌ர்பாக கோலி கூறியது சிறந்த அணித்திறன் கொண்ட ஆர்சிபி அணியை வழி நடத்திய பயணம் மிகவும் அழகானது. அணியின் வளர்ச்சிக்காக ஒத்துழைத்த அனைவருக்கும் எனது நன்றிகள். இம் முடிவு ம சுலபமாக எடுக்கப்பட்டது இல்லை. எனது நெஞ்சுக்கு மிகவும் பிடித்தமான அணி பெங்களூர். நான் முன்னே குறிப்பிட்டது போன்று எனது ஓய்வு காலம் வரும் வரையில் ஆர்சிபி அணிக்காக மாத்திரமே விளையாடுவேன்” என கோலி குறிப்பிட்டார்.


மேலும் சில தினங்கள் முன் இந்திய அணியின் டி20 போட்டியிலிருந்து வழிநடத்தும் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகுவதை  விராட் கோலி அறிவித்திருந்தது  குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad