இன்றைய செய்தி

Post Top Ad

02 October 2021

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்..!



மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சேவையைப் பெற்றுக் கொள்ள நினைக்கும் பொதுமக்களுக்கான அறிவித்தல் ஒன்றை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ளது அதன்படி அந்த திணைக்களத்தின் சேவையைப் பெற்றுக் கொள்ள நினைக்கும் பொதுமக்களுக்கான திணைக்களத்தின் பிரதான தொலைபேசி இலக்கமான 011 76 77 877 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகளை மேற்கொண்டு முன் பதிவுகளை(திகதி/நாள்/நேரம்) செய்து கொள்ளும்படி திணைக்களம் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் திணைக்களத்தின் கடமை நாட்களில் ஓட்டுனர் உரிமம் பெற்றுக் கொள்வதற்கு 0707677977 என்னும் இலக்கத்திற்கும், வாகன பதிவுகளை மேற்கொள்ள 070 76 77877 என்னும் தொலைபேசி இலக்கங்களுக்கு கடமை நாட்களில் தொடர்புகளை ஏற்படுத்துவதன் மூலம் தேவையான விளக்கங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் மேலதிகமாக விளக்கங்கள் வாட்ஸ்அப்,வைபர் போன்ற செயலிகள் ஊடாகவும் பெற்றுக் கொள்ள முடியும்.

No comments:

Post a Comment

Post Top Ad