இன்றைய செய்தி

Post Top Ad

04 October 2021

தடுப்பூசி பெற்றுக் கொண்டால் மாத்திரமே அனுமதி வவுனியா அலுவலகம் அறிவிப்பா??

 


வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்பு ஒட்டப்பட்ட அறிவித்த பலகையினால் சர்ச்சை உண்டாகியுள்ளது அதாவது வவுனியா பிரதேச செயலகத்தினுள் நுழைவதற்கு தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களுக்கு மாத்திரமே அனுமதி உண்டு என பிரதேச செயலாளரினால் அறிவித்தல் பலகை இடப்பட்டுள்ளதையடுத்து அது தொடர்பாக வட மாகாண இணைப்பாளரான த .கனகராஜ் அவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் விளக்கம் கோறியுள்ளார்.

அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது வவுனியா பிரதேச செயலகத்திற்கு வருகை தரும் மக்கள் தமது தேசிய அடையாள அட்டையுடன் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டதற்கான தடுப்பூசி அட்டையையும் கொண்டு வரவேண்டும் அவ்வாறு கொண்டு வருபவர்களை பிரதேச செயலகத்தில் அனுமதிக்கப்பட்டு சேவை வழங்கப்படும் என்பதோடு தடுப்பூசி பெறாதவர்களுக்கு  வெளியில் வைத்து சேவை வழங்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக பலதரப்பட்ட செய்திகளும் சமூக ஊடகங்களிலும் வெளியாகியுள்ளதுடன் இதற்கான எழுத்துமூல விளக்கத்தை வடமாகாண மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளரான த. கனகராஜ் அவர்கள் வவுனியா பிரதேச செயலாளரிடம் கோறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad