சமூக வலைத்தளங்களில்
அனைவரும் படிக்க வேண்டிய பொலிஸாரின் விஷேட அறிவிப்பு என
போலியான செய்தி ஒன்று பரப்பப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நாட்டில் பொலிஸாரால் அறிவிக்கப்பட வேண்டிய விடயங்கள் ஏதேனும் இருப்பின், அவை பொலிஸ் தலைமையகத்தின் கடிதம் மூலம் அல்லது பொலிஸ் ஊடகப் பிரிவின் கடிதத்தின் மூலம் ஊடகங்களுக்கு அறிவிப்பு வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment