நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப் படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை நீக்குவதா அல்லது தொடருவதா என்பதைப்பற்றிய இறுதித் தீர்மானத் எதிர்வரும் செப்டம்பர் 30 ஆம் கலந்துரையாடல்களை மேற்க்கொண்டு அடுத்த மாதம் 1 ஆம் திகதி நாட்டை திறப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நாவலப்பிட்டிய பொது வைத்தியசாலையின் அபிவிருத்தி சம்மந்தமாக 25 ஆம் திகதி நேரடியாக சென்று பார்வையிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தற்போது நாட்டில் கொரோனா தொற்று ஓரளவுக்கு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது, நாளுக்கு நாள் தொற்றாளர்களின் எண்ணிக்கையும், மரணங்களின் எண்ணிக்கையும் குறைவடைந்து செல்வதை அவதானிக்க முடிகின்றது.
அத்துடன் நாட்டை திறந்ததும் பின்பற்ற வேண்டிய சுகாதாரடைமுறைகள் இருக்கமாகவே பேணப்படும் என்று அவர் கூறினார்.
எது எவ்வாறாயினும் நாட்டை திறப்பது குறித்து எதிர் வரும் 30 ஆம் திகதி வியாழக்கிழமை அன்றே உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment