இன்றைய செய்தி

Post Top Ad

18 June 2022

அடுத்து அரச அதிகாரிகள் மீது தாக்குதல்..!

 


அரச அதிகாரிகள் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டால் மக்கள் அடுத்ததாக அரச அதிகாரிகளை தாக்குவார்கள் என விவசாய அமைச்சின் செயலாளர் ரோஹண புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.


இதன் காரணமாக தற்போதைய நிலவரத்தை புரிந்து கொண்டு அரச அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு வேலைத்திட்டத்துடன் இணைந்து நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே விவசாய அமைச்சின் செயலாளர் ரோஹண புஸ்பகுமார இதனை தெரிவித்தார்.

தற்போதைய நெருக்கடி நிலையைப் புரிந்து கொண்டு அதனைச் சமாளிப்பதற்கான திட்டங்களை வகுப்பதில் அரச அதிகாரிகள் முன்னின்று செயற்பட வேண்டுமென அவர் மேலும் சுட்டிக்காட்டினார்

No comments:

Post a Comment

Post Top Ad