இன்றைய செய்தி

Post Top Ad

02 June 2022

இலங்கை - அவுஸ்திரேலியா போட்டித் - பார்வையாளர்களுக்கான அறிவிப்பு.


இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டிகளுக்கு அனுமதி பத்திரங்களின் விலைகளை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் குறைவாக வைத்திருக்கொள்ள தீர்மானித்துள்ளது என இலங்கை கிரிக்கெட் செயலாளர் மொஹான் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.


 அத தெரண SPORTS STRAIGHT DRIVE நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.


 இப் போட்டிகளுக்கான அனுமதி பத்திரங்கள் இலங்கை கிரிக்கெட்டின் அனுமதி பத்திர கவுன்ட்டர்கள மூலம் இம்மாதம் 4ம் திகதி முதல் விற்பனை செய்யப்படுப்படவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


 மேலும் மைதானங்களில் அனுமதி பத்திரம் விற்பனை செய்தல் இடம்பெறமாட்டாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad