அரச உத்தியோகத்தர்களுக்கு வௌ்ளிக்கிழமைகளில் விஷேட விடுமுறை வழங்குவதற்கான சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
அரச நிறுவன ஊழியர்கள், வெள்ளிக்கிழமையன்று வீட்டில் தங்கியிருந்து வீட்டுத் தோட்டங்களில் பயிர் செய்கையில் ஈடுபடுதல் என்ற தீர்மானத்திற்கு அமைய இந்த சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.
இதன்படி, அரச நிறுவனங்களின் ஊழியர்களுக்கான அழைப்பைக் கட்டுப்படுத்தும் தலைப்பின் கீழ் வெளியிடப்பட்ட 25.05.2022 திகதியிட்ட பொது நிர்வாக சுற்றறிக்கை (10/2022) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள புதிய சுற்றறிக்கையின் (15/2022) விதிகள் 24.06.2022 முதல் அமுலுக்கு வரும் என பொது நிர்வாக அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment