தொழில் திணைக்களத்தின் அலுவலகங்கள் இனி வெள்ளிக்கிழமைதோரும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் செலவைக் கக்ஷகுறைக்கும் நோக்கங்களின் ஒரு கட்டமாக இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக தொழில் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதன்படி ஊழியர்களுக்கு விடுமுறை எதிர்வரும் மூன்றாம் திகதி தொடக்கம் தொழில் திணைக்களத்தின் கீழுள்ள சகல அலுவலகங்களும் வௌ்ளிக்கிழமை நாட்களில் மூடப்பட்டு ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.
தொழில் திணைக்களத்தின் பிராந்தியக் காரியாலயங்கள், ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பவற்றின் அலுவலகங்களும் மறு அறிவித்தல் வரும் வரை வெள்ளிக்கிழமை நாட்களில் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment