இன்றைய செய்தி

Post Top Ad

02 June 2022

மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரிப்பு.!


இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாட்டால் பாரிய பிரச்சினைக்கு மக்கள் உள்ளாகி வருவதுடன், இதன் விளைவாக மரக்கறிகளின் விலைகளும் சடுதியாக அதிகரித்துள்ளது.


விவசாயிகள் பலருக்கு பல வாரங்களாக டீசலைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையும் அதன் விளைவாக  தமது உற்பத்திகளை பொருளாதார நிலையங்களுக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.



இதனால் காரணமாக பல மொத்த வியாபாரிகள், அன்றாடம் பொருளாதார மையங்களில் சும்மா இருக்கும் நிலைக்குத் ஆளாகி உள்ளனர்,


 இதே நேரம், நாட்டில் மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் , விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருட்களை உள்ளூர் சந்தைக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.


மரக்கறிகள், பழங்களின் விலை உயர்வினால் நுகர்வோர் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.


 மரக்கறிகளின் விலை அதிகமாக இருப்பதால், வழக்கமான கறிகளை உணவில் சேர்ப்பதில் சிரமம் இருப்பதாக சில நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.


 அதன்படி தம்புள்ளை  பொருளாதார மத்திய நிலையத்தில் விற்பனை செய்யப்படும் மரக்கறிகளின் மொத்த விற்பனை விலைகள் இதோ (ஒரு கிலோவுக்கு):


கோவா ரூ. 210-220

போஞ்சி - ரூ. 570-580

லீக்ஸ் ரூ. 175-180

கரட் - நுவரெலியா ரூ. 300-310

தக்காளி- ரூ. 490-500

முள்ளங்கி -ரூ. 150-180

நோகோல் - ரூ. 230-240

கெக்கரிக்காய் - ரூ. 70-80

வெள்ளரிக்காய் - ரூ. 90-100

உருளைக்கிழங்கு – நுவரெலியா ரூ. 250-260

பாகற்காய் - ரூ. 440-450

பூசணி - மலேசியன் ரூ. 100-110

கத்தரிக்காய் -ரூ. 240-250

முருங்கை - ரூ. 450-460

No comments:

Post a Comment

Post Top Ad