மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளார்.
தனது உறவினர் வீட்டுக்கு ஆடை தைப்பதற்காக சென்ற நிலையிலேயே 16 வயதுடைய சிறுமி காணாமல் போயுள்ளதாக அவரது அம்மம்மா முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளளார்.
குறித்த சம்பவமானது புதன்கிழமை சிறுமியின் சகோதரி வேலைக்கு சென்ற நிலையில் பி.ப 1.30 மணியளவில் தனது உறவினரின் வீட்டில் ஆடை தைப்பதற்கு செல்வதாக அம்மம்மாவிடம் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
No comments:
Post a Comment