நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு இருந்து தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் நாளைய தினம் தொடக்கம் தளர்த்திக் கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது, இதன்போது பொதுப்போக்குவரத்து தொடர்பிலான அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது அதன்படி,
மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து சேவை சில வாரங்களுக்கு இடம்பெறாது என போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
மேலும் மாகாணங்களுக்குள் பொது போக்குவரத்து சேவை இடம்பெறும் அரச தனியார் போக்குவரத்து சேவை வழமைபோன்று இடம்பெறும் என்றும் பொது போக்குவரத்தின் போது பேருந்துகளின் ஆசனங்களுக்கு அமைய பயணிகளை ஏற்ற வேண்டும் என்பதுடன் அதை மீறும் பட்சத்தில் அதற்குரிய சட்ட நடவடிக்கைகள் பொலிசாரினால் மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
ரயில்வே போக்குவரத்து தொடர்ந்து தடை பட்டிருக்கும் இது தொடர்பான தீர்மானம் பின்னர் அறிவிக்கப்படும்
No comments:
Post a Comment