சிகரெட்டுக்களுக்கான புதிய வரியினை அமல்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பிக்க விரைவில் முடிவெடுப்பதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
மது மற்றும் புகையிலை தொடர்பான தேசிய அதிகார சபையுடன் சுகாதார அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பாக தீர்மானிக்கப்பட்டுள்ளது அதிகார சபையின் தலைவரான கலாநிதி சமாதி ராஜபக்ச உள்ளிட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் புதிய வரி கொள்கை அமல் படுத்துவதன் மூலம் நாட்டில் புகையிலை பாவனையை கட்டுபாட்டுக்குள் கொண்டுவர முயற்சி எடுக்க முடியும் என அவ் அதிகார சபையின் தலைவரான சமாதி ராஜபக்ச தெரிவித்தது குறிப்பிட்டத்தக்கது.
No comments:
Post a Comment