காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் தொடர்பாக வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது அதன்படி சாரதி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிப்பதற்கான கால வரையறை நீடிக்கப்பட்டுள்ளது போக்குவரத்து அமைச்சு வர்த்தமானி மூலம் இதனை அறிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி தொடக்கம் இன்றைய தினம் 30 ஆம் திகதி செப்டம்பர் மாதம் வரை இக்காலகட்டத்திற்குள் காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களை காலாவதியான திகதியில் இருந்து மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஒக்டோபர் மாதத்திலிருந்து எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் காலாவதியாகவுள்ள சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கு மேலதிகமாக 6 மாத கால தவணை கொடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment