இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான திரைப்படம் சிங்கம் 2 இந்தத் திரைப்படத்தில் வில்லனாக டானியின் கூட்டாளியாக நடித்த நைஜீரிய நடிகரான கார்க்கின் மெல்வின் என்னும் நடிகர் அந்தப் படத்தில் போதைப் பொருள் கடத்தல் கும்பலில் ஒருவராக நடித்திருந்தார். இவர் நிஜ வாழ்விலும் போதைப் பொருள் கடத்தியதாக பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கார்க்கின் மெல்வின் இன்னும் இந்த நடிகர் தமிழ் மட்டுமல்லாது இந்தி ,கன்னடம், மலையாளம், மற்றும் தெலுங்கு உள்ளிட்ட படங்களோடு சுமார் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விஸ்வரூபம் திரைப் படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நடிப்பு மீது கொண்ட அதீத ஆர்வம் காரணமாக நியூயோர்க்கில் உள்ள பிலிம் அகடமி ஒன்றில் சில ஆண்டுகள் பயிற்சி பெற்றார் இந்நிலையில் தனக்கு கிடைத்த சினிமா கதாபாத்திரத்தை மெல்வின் நிஜ வாழ்க்கையிலும் பயன்படுத்த தொடங்கியுள்ளனர் இதனால் பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்துள்ளார். இது தொடர்பாக மத்திய குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு தகவல் கிடைத்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டார் பொலீஸ் விசாரணைகளின் மூலம் அவர் போதைப் பொருளை கடத்துவது உறுதிப்படுத்தப்பட்டது.
இதனை அடுத்து மெல்வினின் வீடு அதிரடி சோதனைக்கு உட்படுத்தப்பட்டது எம் டி எம் ஏ மற்றும் ஹாரிஸ் பஞ்சா என்னும் போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டது.
இதன் பெறுமதி எட்டு லட்சம் ரூபாய், மேலும் 5000 ரொக்கப் பணம் அங்கு இருந்த செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது மேலும் கார்க்கின் மெல்வின் சினிமா பிரபலங்களுக்கு போதை பொருளை விற்பனை செய்தாரா என்ற கோணத்திலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment