நாட்டில் ஒரு சில பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அவற்றில் குறிப்பாக பால்மா, அரிசி, சமையல் எரிவாயு, சீமெந்து போன்ற பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த நிலையின் காரணமாக, நிர்ணய விலையை விட அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளிடம் அறவிடப்படும் தண்டப்பணத்தினை இன்று தொடக்கம் 1 இலட்சம் முதல் 5 இலட்சம் வரை அதிகரிக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் லசன்த்த அழகியவண்ண தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற பாவனையாளர் அலுவல்கள் மற்றும் அதிகாரசபை திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இதனை குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்
நாட்டில் உள்ள பாவனையாளர் சட்ட மூலத்தின் அடிப்படையில் அதிக விலைக்கு பொருட்களை விற்றால் அறவிடப்பட்டு வந்த தண்ட தொகையினை ஆரம்பத்தில் பத்தாயிரமாக இருந்த குறைந்தபட்ச
தொகை தற்போது ஒரு இலட்சமாகவும், ஒரு இலட்சமாக இருந்த அதிகூடிய தொகை தற்போது பத்து இலட்சமாகவும் திருத்தியமைக்கப்படடுள்ளது என்று அவர் கூறினார்.
மேலும் இந்த தொகை 20 இலட்சம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய நிலையை பயன்படுத்தி ஒருசில வியாபாரிகள் அத்தியாவசியப் பொருட்களின் விலையை அதிகரித்தும் பதுக்கி வைத்தும் விற்பனை செய்துவருகின்றனர்.
இவ்வாறு செயற்படும் வியாபாரிகளுக்கு முன்பு அமுல் படுத்தப்பட்டிருந்த தண்டப்பண தொகை மோதுமானதாக அமையவில்லை எனவேதான் அவர்களது குற்றத்தை குறைப்பதற்கும் நுகர்வோரை பாதுகாப்பதற்கும் இவ் தண்டப்பண அதிகரிப்பை மேற்க்கொண்டுள்ளோம் எனக் கூறினார்.
நாட்டில் தட்டுப்படாக உள்ள பால்மா, அரிசி, சமையல் எரிவாயு, சீமெந்து போன்ற பொருட்களுக்கு தட்டுப்பாடு உள்ளதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். இந்த பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் அந்த பொருட்களுக்கான விலையை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment