இன்றைய செய்தி

Post Top Ad

23 September 2021

கொவிட் தொடர்பான ஆலோசனைகளை பெற புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்...!



கொவிட் தொற்றினால்  பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவ ஆலோசனையினை பெற்றுக்கொள்ள விரும்புவோர் எந்த நேரத்திலும் 247 என்ற தொலைபேசி இலக்கத்தை அழைப்பதன் மூலமும் மருத்துவர் ஒருவரை தொடர்பு கொள்ள முடியும் என கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பேராசிரியரான இந்திக கருணாதிலக தெரிவித்துள்ளார்.


இந்த விடயம் குறித்து அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.


மேலும், குறித்த தொலைபேசி இலக்கத்தின் மூலமாக மருத்துவரை தொடர்பு கொண்ட பின்னர், நோயாளியின் நோய் நிலைக்கு ஏற்ப அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad