மத்திய பிரதேச மாநிலமான நீமச் மாவட்டத்தில் பேஸ்புக் மூலம் அறிமுகமாகிய பெண் காவலரை கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி அதனை வீடியோ பதிவிட்டமை தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் அந்த மாவட்டத்திற்குரிய பெண் காவல் துறை அதிகாரி கூறியதாவது குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டுள்ள இருவரும் பெண் காவலருக்கும் பேஸ்புக் மூலம் அறிமுகம் ஏற்ப்பட்டுள்ளது மேலும் கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்திலிருந்து அந்த இரு குற்றவாளிகளும் பெண் காவலருடன் தொலைபேசியில் நேரடியாக உரையாட தொடங்கியுள்ளனர், இதனால் தனது சகோதரியின் பிறந்த தினம் என்று கூறி பெண் காவலருக்கும் அழைப்பொன்றை விடுத்துள்ளார்.
அதனை ஏற்று சென்ற நிலையிலே தன்னை அந்த நபர்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதுடன் அதனை வீடியோ பதிவு செய்ததாகவும் பெண் காவலரும் கூறியுள்ளார்.
மேலும் இதனை வைத்து தன்னிடம் பணம் பறிக்க முயற்சிப்பதாகவும் இதைப்பற்றி வெளியில் கூறினால் கென்று விடுவோம் என்று குற்றவாளியும் அவரது தாயாரும் மிரட்டி வருவதாக அந்த பாதிக்கப்பட்ட பெண் காவலர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக 5 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணைகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றது.
No comments:
Post a Comment