யாழ்பணத்திலிருந்து கொழும்பற்கு கஞ்சா கடத்திச் சென்ற பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட குழுவொன்று மாங்குளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
24 ஆம் திகதி மாங்குளம் பொலிஸ் பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் ஏ9 வீதி மாங்குளம் பகுதியில் வைத்து வாகனம் சோதனைக்குட்படுத்தப்பட்ட போது 6 கிலோ கஞ்சா உட்பட பொலிஸ் அதிகாரி ஒருவருடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 34 வயதுடைய புத்தளத்தை சேர்ந்த பொலிஸ் அதிகாரியும்,யாழ்ப்பாணம் கொடிகாமத்தினைச் சேர்ந்த 32 வயதான நபரும், நொச்சியாகமவைச் சேர்ந்த 25 வயதுடைய நபருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இவர்களிடம் விசாரணைகள் மேற்க்கொள்ளப்பட்டு முல்லைத்தீவு
மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலேப்படுத்திய போது இவர்களை எதிர்வரும் 6ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment