மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் ஆட்டத்தில் 156 என்னும் வெற்றி இலக்கை நோக்கி விளையாடி வந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதல் 6 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 63 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
14 ஆவது ஐபில் சீசன் தொடரின் 34 ஆவது போட்டியில் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின, இப்போட்டியின் ஆரம்பத்தில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தீர்மானித்தது
இதன்படி ஆரம்பத்தில் துடுப்பெடுத்தாடிய ஆடிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
156 என்ற வெற்றி இலக்கை நோக்கி கொல்கத்தா அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ஷுப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் களமிறங்கினர். பவர் பிளே வீரான டிரென்ட் போல்ட் வீசிய முதலாவது ஓவரில் கில் 1 சிக்ஸரும், வெங்கடேஷ் 1 சிக்ஸரும் அடித்து பறக்கவிட்டு அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்தனர்.
முதல் பந்தில் கில் 1 பவுண்டரி, 4 வது பந்தில் வெங்கடேஷ் ஒரு பவுண்டரி அடித்தாலும் இறுதி பந்தில் கில் (13) விக்கெட்டை வீழ்த்தினார் பும்ரா.
எனினும், மில்ன் வீசிய பவர் பிளேவின் கடைசி ஓவரில் மீண்டும் அதிரடிக்கு மாறியது கொல்கத்தா. அந்த ஓவரில் திரிபாதி அடித்த பவுண்டரி உள்பட மொத்தம் 12 ஓட்டங்கள் கிடைத்தன.
இதன்மூலம், பவர் பிளே முடிவில் கொல்கத்தா அணி 1 விக்கெட் இழப்புக்கு 63 ஓட்டங்கள் எடுத்துக்கொண்டது.
வெங்கடேஷ் 15 பந்துகளுக்கு 33 ஓட்டங்களுடனும், ராகுல் திரிபாதி 12 பந்துகளுக்கு 16 ஓட்டங்களுடனும் எடுத்து விளையாடிக்கொண்டு வந்தனர்.
கொல்கத்தா வெற்றிக்கு 84 பந்துகளில் 93 ஓட்டங்கள் மட்டுமே இருந்து குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment