இன்றைய செய்தி

Post Top Ad

24 September 2021

கொரோனா மருந்து வீடுகளுக்கு விநியோகம் இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு...!

 


கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கத்துடன்  அனைத்து வீடுகளுக்கும் சுதேசிய மருந்து பொதி ஒன்றினை விநியோகிக்கும் செயற்றிட்டமானது அடுத்த வாரத்தில் தொடக்கம் ஆரம்பிக்கப்பட உள்ளதாக சுதேச வைத்திய முறைகயின் மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதார இராஜாங்க அமைச்சருமான சிசிர ஜயக்கொடி ​கூறியுள்ளார்.


இந்த சுதேச மருந்து பொதியில், கொரோனா வைரஸிற்கு எதிராக செயற்படக்கூடிய  ஆயுர்வேத வைத்தியசாலைகளில் தற்போது உபயோகிக்கப்பட்டு வரும் பூசணி பொடி மற்றும் ஆரோக்கியமான நோய்த்தடுப்பு பானம் என்பன உள்ளடக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார் .


மேலும் கொரோன தொற்று பரவல் அதிகமாக உள்ள பிரதேசங்களில்  ஆரம்பத்தில் இம் மருந்து பொதிகளை விநியோகிக்கப்பட இருப்பதாக  இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்தார். 

No comments:

Post a Comment

Post Top Ad