இன்றைய செய்தி

Post Top Ad

16 October 2021

2021க்கான ஐபிஎல் தொடரை கைப்பற்றியது சென்னை அணி..!

 


ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி நேற்றைய தினம் 15ஆம் திகதி இடம்பெற்றது இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதின இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்றுள்ளது.


போட்டியின் நாணயச் சுழற்சியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றதையடுத்து சென்னை அணியை துடுப்பெடுத்தாடும் படி பணித்தது, அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 192 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.


இதில் சென்னை அணி சார்பாக டூ பிளசிஸ் 59 பந்துகளில் 82 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார் அதில் 3ஆறு ஓட்டங்களும் 7நான்கு ஓட்டங்களுடனும், மொய்ன் அலி 36 ஓட்டங்களும்,ருதுராஜ் கெய்க்வாட் 32 ஓட்டங்களும், ராபின் உத்தப்பா 31 ஓட்டங்களையும் பெற்றக்கொண்டனர்.


பந்து வீச்சு சார்பில் சுனில் நரேன் இரண்டு விக்கெட்டுகளையும் பெற்றுக்கொண்டார்.

193 எனும் வெற்றி இலக்கு கொண்டு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி இருபது ஓவர்கள் நிறைவில் 169 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது அதில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான சுப்மான் கில்  51 ஓட்டங்களும், வெங்கடேச ஐயர் 50 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர், மேலும் 9-வது விக்கெட் உடன் விளையாடிய லோகி பெர்குசன் 18 ஓட்டங்களையும், ஷிவம் மாவி 13 பந்துகளில் 20 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.


சென்னை அணியில் தாகூர் 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா மற்றும் ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளும் ஆக பெற்றுக்கொண்டனர்.


அதன்படி 2021 காண ஐபிஎல் தொடரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்காவது முறையாகவும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad