இன்றைய செய்தி

Post Top Ad

15 October 2021

விபச்சார விடுதி சுற்றிவளைப்பு...!

 


நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடாபாடுவ பகுதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் விபச்சார விடுதி நடத்தி வந்த ஆண் உட்ப்பட விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த இரண்டு பெண் அடங்களாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


நீர்கொழும்பு பொலிஸ் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கடந்த 13ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 40,46 மற்றும்  21 வயதுடைய நபர்கள் ஆவார்.


கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad