விஜய் டிவியில் ஒளிபரப்பபட்டு வந்த பாரதிகண்ணம்மா சீரியல் தொடரில் கண்ணம்மாவாக நடித்துவந்த ரோஷினி அந்த தொடரில் இருந்து விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விஜய் டிவி தொடர்களில் மிகவும் சுவாரஸ்யமான பல தரப்பட்ட திருப்பங்களுடன் ஒளிபரப்பப்பட்டு வந்த நாடக தொடர் பாரதி கண்ணம்மா இது மக்களினால் பெரிதும் ரசிக்கப்பட்டு வந்தது இந்நிலையில் இத்தொடரில் இருந்து அந்த கதாநாயகி விலகுவதாக அறிவித்துள்ளார் இதனால் அந்த நாடக தொடரின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் இந்த தொடரில் ரோஷினி இன்னும் இரண்டு வாரங்களுக்கு மாத்திரம் நடிப்பார் என்றும் அதன் பின்பு வேறு ஒரு கதாநாயகி பாரதிகண்ணம்மா தொடரில் அறிமுகப்படுத்தப்படுவார் எனவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த தொடரில் இருந்து ரோஷினி விலகுவதற்கான காரணம் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment