இந்திய வெளியுறவு செயலாளர் ஆன ஶ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்களா அவர்கள் இலங்கைக்கு நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்ததுடன், இன்றைய தினம் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ் மாவட்டத்திற்கான விஜயத்தினையும் மேற்கொள்ளவுள்ளார்.
மேலும் அவர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் இலங்கை கௌரவ ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச, நிதி அமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்திக்க உள்ளதுடன் இலங்கை வெளியுறவு செயலாளர் உடன் சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டு இருதரப்பு விவகாரங்கள் பற்றி பேச இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
No comments:
Post a Comment