நாடு தற்போது எதிர்கண்டுள்ள பொருளாதார நெருக்கடியைஏற்றம் தரும் ஏற்றுமதி பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் தீர்வினைக் கொண்டு வர முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்றையதினம் வங்கிகளின் தலைவர்களை சந்தித்து பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் உலகளவிய ரீதியில் சுமார் 70 நாடுகள் தற்போது பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் இலங்கை முதலிடம் வகிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சர்வதேசரீதியில் உணவுகளின் விலைகளும், சர்வதேச வட்டி விகிதங்களும் உயரும் அபாய நிலையில் உள்ளது எனவே இவ்வாறான ஒரு நிலையில் சரியான கொள்கைகளுடன் செயற்படுவோம் என ஆனால் நாட்டினை அகல பாதாளத்திற்கு செல்லாமல் காக்க முடியும்.
இப்பிரச்சினைக்கான தீர்வினை பெறுவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் உறுதியான தீர்வை காணும் வரை நாட்டில் நெருக்கடி நிலையே காணப்படும்.
No comments:
Post a Comment