இன்றைய செய்தி

Post Top Ad

17 May 2022

அரச ஊழியர்களுக்கு அறிவிப்பு..!

 


நாட்டில் எரிபொருள் உட்பட  அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறை காரணமாக அரசின் செலவினங்களைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அரச ஊழியர்களை அலுவலகங்களுக்கு அழைப்பதனை கட்டுப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரிடம், அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் கே.டி.எஸ்.ருவன் சந்திர இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.


அலுவலகப் பணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் வரவழைத்து நிறுவன தலைவர்களின் விருப்பத்திற்கேற்ப செயற்பட அனுமதிக்குமாறு அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


தொலைவில் இருந்து பணிக்கு வரும் உத்தியோகத்தர்களை அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள பணியிடத்திற்கு தற்காலிகமாக இணைத்துக் கொள்ள தேவையான அதிகாரங்களை வழங்குமாறும் நிறுவனங்களின் தலைவர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.  


எரிபொருள்,மின்சாரம் தண்ணீர் என்பவற்றைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

No comments:

Post a Comment

Post Top Ad