நவகத்தேகம முல்லேகம பிரதேசத்தில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த சகோதரனும் சகோதரியும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
குடும்ப தகராறு முற்றியதன் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறினால் மனைவியின் மூத்த சகோதரர் வந்துள்ளார், அங்கு கணவன் அவரை கூரிய ஆயுதம் கொண்டு தாக்கியுள்ளார்.
அதே வேளை அவரது மனைவியும் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவர்கள் 32 வயதுடைய ஒருவரும் அவரது 25 வயது சகோதரியும் ஆவர்.
சந்தேக நபர் காயமடைந்த நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment