இன்றைய செய்தி

Post Top Ad

03 June 2022

இலங்கை கிரிக்கெட் அணியில் லசித் மலிங்கவுக்கு புதிய பதவி!

 



இலங்கை கிரிக்கெட் அணியின் வேகபந்து பயிற்றுவிப்பு ஆலோசகராக முன்னாள் கிரிக்கெட் வீரர் லசித் மலிங்க நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


எதிர்வரும் 7 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இருபதுக்கு இருபது மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களுக்கான வேகபந்து பயிற்றுவிப்பு ஆலோசகராகவே லசித் மலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.


இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய தேசிய கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபதுக்கு20 போட்டிகளில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.


IPL இல்  மலிங்க இந்த வருடம் ராஜஸ்த்தான் றோயல்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக செயற்பட்டது குறிப்பிடத்தக்கது.

 அத்தோடு ராஜஸ்த்தான் றோயல்ஸ் அணி இறுதியாட்டாம் வரை முன்னேறியிருந்தும் சுட்டிக்காட்டத்தக்கது.



No comments:

Post a Comment

Post Top Ad